தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் நலச்சங்கம் துவக்கம்
திருச்சி, ஜூலை 7: திருச்சி மத்திய பஸ் நிலையத்திலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நலச்சங்க துவக்க விழா நேற்று நடந்தது.விழாவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஓய்வு பெற்ற முன்னாள் முதன்மை நீதிபதியும், மனநல ஆய்வு வாரியத்தின் தலைவருமான செந்தில்குமரேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட் கிளை மதுரை பெஞ்ச் கூடுதல் அட்வகேட் ஜெனரல் (ஏஏஜி.VI) பாஸ்கரன், பரிசுத்தம் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி அந்தோணிசாமி, ஈரோடு பங்களா முதலாளி டிரஸ்டீ முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜன் வரவேற்றார். இச்சங்கத்தின் மாநில செயலாளர் முகமது அக்பர் நன்றி தெரிவித்தார்.
Advertisement
Advertisement