திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
திருத்துறைப்பூண்டி, ஜூலை 8: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையினை திருத்துறைப்பூண்டி நகரம் 6 வது வார்டில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர செயலாருமான ஆர் எஸ் பாண்டியன்தொடங்கி வைத்தார்.இதில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் வசந்த், வார்டு செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.