லாட்டரி, குட்கா, கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை
ஈரோடு, ஜூலை 9: ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் கோவை சரக டிஐஜி சசிமோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பல்வேறு அறைகளை பார்த்தார். தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக பதிவான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் விபரங்கள் உள்ளிட்ட கோப்புகளை செய்தார். மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா, கஞ்சா விற்பனை ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு, டிஐஜி சசிமோகன் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, டிஎஸ்பி அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட எஸ்பி சுஜாதா, டிஎஸ்பி முத்துக்குமரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.