உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் 4 இடங்களில் இன்று நடக்கிறது
தேனி, ஜூலை 23: தமிழ்நாடு முழுவதும் கடந்த 15ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. இதன்படி தேனி மாவட்டத்தில் இன்று (23ம் தேதி) போடி நகராட்சிக்கு உட்பட்ட 9 மற்றும் 10வது வார்டுகளுக்கான முகாம் போடி ஹசன் ஹுசைன் தெருவில் உள்ள துறையப்ப நாடார் திருமண மண்டபத்திலும், புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 1 முதல் 7 வார்டுகளுக்கான முகாம் புதுப்பட்டி சமுதாய கூடத்திலும், அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் உள்ள 1 முதல் 7 வார்டுகளுக்கான முகாம் அனுமந்தன்பட்டி ரோட்டில் உள்ள எஸ்ஆர் மஹாலிலும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆம்பூர் பாளையம் ஊராட்சிக்கான திட்ட முகாம் ஸ்ரீபரணி பாண்டியன் மீட்டிங் ஹாலிலும் இன்று நடக்க உள்ளது.