உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 மண்டலங்களில் இன்று நடக்கிறது: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (23ம் தேதி) மாதவரம் மண்டலம், வார்டு-24ல் புனித அந்தோணி நகர், ஜிஎன்டி சாலையில் உள்ள தியா திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம்,
வார்டு-41ல் மணலி சாலை, காவல் நிலையம் அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பேங்க் வாகன நிறுத்த இடம், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74ல் பெரம்பூர், மங்களபுரம், கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111, மாதிரி பள்ளி சாலையில் உள்ள சமூக நலக்கூடம்,
வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148ல் நெற்குன்றம், என்.டி.பட்டேல் சாலை, ஜி.எம்.மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194ல் ஈஞ்சம்பாக்கம், கைலாஷ் கார்டன் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.