10, 12ம் வகுப்பு தேர்வில் புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
திருச்செந்தூர், மே 21: பத்து மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வீரபாண்டியன்பட்டினம் புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வீரபாண்டியன்பட்டினம் புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் அப்ரினா 478, ஸ்னோஸ் ஜாப்ரினா 477, புவனேஷ் 475 மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் மோனா 475, ஜெஸ்லின் ரூத் 456, லோக காந்தி 433 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பெர்னதத், மற்றும் அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.
Advertisement
Advertisement