Home
/
மாவட்டம்
/
Special Worship On The Occasion Of Visakha Nakshatra At Needamangalam Murugan Temple
நீடாமங்கலம் முருகன் கோயிலில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
01:55 AM Jul 07, 2025 IST
நீடாமங்கலம், ஜூலை 7: நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்