மேலப்பரவு மலைக் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
போடி, ஜூலை 8: போடி அருகே முந்தல் சாலையில் உள்ள மேலப்பரவு மலைக் கிராமத்தில் அரசு நலத்திட்டங்கள் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்பி சிவபிரசாத் ஆலோசனையின் படி நடைபெற்ற இந்த முகாமில் ஓடைப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரத்தினம், குழந்தைகள் நல மருத்துவர் சந்திரிகா, மருந்தாளுநர் ரமேஷ், சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் ஆ கியோர் பங்கேற்று மலைவாழ் மக்களுக்கு உடல் பரிசோதனை செய்தனர். பயனாளிகளுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. தடுப்பூசிகளும் போடப்பட்டன.
மேல்சிகிச்சைக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் விஜய் மணிகண்டன் உள்ளிட்ட போலீசாரும் கலந்துகொண்டனர். வனப்பகுதிக்குள் நெகிழிப்பை பயன்படுத்த கூடாது, மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் பெரிய சாமி முகாமை ஏற்பாடு செய்திருந்தார். முகாமில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டது.