திருவானைக்கோயிலில் ஆனி பிரதோசம் சுவாமி, நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்சி, ஜூலை 9: திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயிலில் நேற்று ஆனி பிரதோசத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடந்தது.
திருச்சி, திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயில் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக திகழ்க்கிறது. பொதுவாக பிரதோஷ நாட்களில் சிவதலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவானைக்கோயில் ஜம்புகேஷ்வரருக்கு பிரதோஷ நாட்களில் பெகு சிறப்பாக பிரதோஷ அபிஷேகங்கள் நடைபெறும்.
இந்நிலையில் நேற்று ஆனிமாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திபெருமானுக்கு திருநீர், சந்தனம், தேன், தயிர், பால் போன்ற மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி மற்றும் நந்திபெருமானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.