திருவண்ணாமலையில் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, குளிர் கண்ணாடி எஸ்பி வழங்கினார்
திருவண்ணாமலை மார்ச் 28: திருவண்ணாமலையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தொப்பி மற்றும் குளிர் கண்ணாடி ஆகியவற்றை எஸ்பி கார்த்திகேயன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. கோடைகாலத்தின் ஆரம்ப நாட்களிலேயே அதிகபட்சமாக 98 டிகிரி கடந்து வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
Advertisement
இந்நிலையில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் தொப்பி மற்றும் குளிர் கண்ணாடி ஆகியவற்றை எஸ்பி கார்த்திகேயன் நேற்று வழங்கினார். மேலும், பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு தினமும் இரண்டு வேளை குளிர்ந்த மோர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், டவுன் டிஎஸ்பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement