எஸ்பி நேரில் ஆய்வு
தேன்கனிக்கோட்டை, ஏப்.4: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தளி சட்டமன்றத தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட எஸ்பி தங்கதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருட்டுகோட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை எஸ்பி தங்கதுரை ஆய்வு செய்து பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement