மானாங்குடி முகாமில் மனுக்களுடன் குவிந்த மக்கள்
மண்டபம்,செப்.14: மானாங்குடி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மானாங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோமசுந்தரம் தலைமையில் வகித்து முகாமை துவங்கி வைத்தார்.
Advertisement
முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்ல வீடுகள் போன்ற மனுக்களை ஆணையாளரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மேற்பார்வைக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காணவும் உத்தரவிட்டார். முகாமில் ஊராட்சி செயலர்கள், கிராம அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்துறை சார்ந்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement