ஜிஹெச்சில் ஆக்சிஜன் வாயு கசிவு
ராமநாதபுரம், ஆக. 30: ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பசேதமடைந்த பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் திடீரென வாயு வெளியேறும் சத்தம் கேட்டது. இதனையடுத்து இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வெளியேறினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த மருத்துவமனை தொழில்நுட்ப பணியாளர்கள், ஆய்வு செய்தனர். அப்போது அவசர சிகிச்சைகளுக்காக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் வாயு, சிலிண்டர் பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே வரும் குழாயிலிருந்து வெளியேறியது தெரிய வந்தது. இதனையடுத்து ஆக்சிஜன் சிலிண்டரின் செயல்பாட்டை நிறுத்தினர். இதனால் உடனடியாக வெளியேறிய வாயு நின்றது. மேலும் சேதமடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement