பரமக்குடியில் நடந்த முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்ற எம்எல்ஏ
பரமக்குடி,ஆக.29: தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள் திட்டங்களை இல்லங்களுக்கு அருகிலேயே சென்று சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலர்கள் நேரடியாக இருப்பிடங்களுக்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நேற்று பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21, 22, 23 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது. பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் பார்வையிட்டு, மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். நிகழ்வில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர்மன்றத் துணைத் தலைவர் குணா, வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம், நகர்மன்ற உறுப்பினர்கள் சர்மிளா அக்பர், பாக்கியம், லண்டன் ரமேஷ், பிரபா, கருப்பையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருப்பையா மற்றும் நகராட்சி துறை சார்ந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள். பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.