முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சி
சிவகங்கை, நவ. 15: மறுவேலைவாய்ப்பு பெறாமல் உள்ள 50 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் திறன் பயிற்சிகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டைச் சார்ந்த மறுவேலைவாய்ப்பு பெறாத 10,000 முன்னாள் படைவீரர்களுக்கு அவர்களது வாழ்வாராதத்தினை ஊக்குவித்திடும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்து மறுவேலைவாய்ப்பு பெறாமல் திறன் பயிற்சி பெற விருப்பமுள்ள 50வயதிற்க்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், திறன் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி குறித்த விவரங்களை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.