அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா
சிவகங்கை, நவ. 15: சிவகங்கை மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து, கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டு உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
Advertisement
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் உமா மகேஸ்வரி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய துணை இயக்குநர்/ மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா மற்றும் துணைப்பதிவாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement