அமைச்சர் தலைமையில் அரசு வழக்கறிஞர் இல்ல விழா
காரைக்குடி, அக்,13: காரைக்குடியில் அரசு வழக்கறிஞர் எல்.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், திட்டகுழு உறுப்பினர் பி.ராதா ஆகியோர் புதல்வன் பி.ஆதிருத்ரநாதன் இல்ல காதணி விழா நடந்தது. பி.ஆதிஜெகன்நாதன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து வாழ்த்தினார்.. முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கனிமவளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி, எஸ்.மாங்குடி எம்எல்ஏ, திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர், சிங்கப்பூர் தொழிலதிபர் சொக்கலிங்கம்புதூர் எஸ்.கந்தசாமி வாழ்த்து செய்தி அனுப்பினர். விழாவில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்எம்கே.சொக்கலிங்கம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செட்டிநாடு வி.பாலு ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.