திமுக பொறியாளர் அணி நேர்முக தேர்வு
காரைக்குடி, ஆக. 13: காரைக்குடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழிகாட்டுதல்படி, மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நேர்முக தேர்வு நடந்தது. முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் வாழ்த்தினார். மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.முருகப்பன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நா.குணசேகரன் நேர்முக தேர்வை துவக்கி வைத்தார். நேர்முக தேர்வில் பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ரவி, துணைத்தலைவர் சுலைமான்பாதுஷா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாண்டிசெல்வம், ராமநாதன், சரவணன், குழந்தைவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.