குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்
ராமநாதபுரம், ஆக.7: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில், ராமநாதபுரம் மண்டபம் குறுவட்ட அளவிலான 2025-2026க்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் கடுக்காவலசை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடைபெற்றது. இப்போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் போட்டிகளை நடத்தினார்.இப்போட்டியில் தடை தாண்டுதல், கைப்பந்து, தொடர் ஓட்டம், குண்டு எரிதல், வாலிபால் மற்றும் பல்வேறு தனித்திறன் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பேசும்போது, ‘‘மாணவ,மாணவிகளின் மனவலிமை, உடல் வலிமைக்கு விளையாட்டு இன்றியமையாதது. வட்டார, மாவட்ட அளவிலான விளையாட்டில் பங்கு பெறுவதன் மூலம் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிபெறும் வாய்ப்பை மாணவர்கள் பெறுவீர்கள். எனவே மாணவ,மாணவியர் விளையாட்டு தனித்திறமையை கண்டறிந்து அதற்கேற்ப சிறந்த மாணவர்களை உறுவாக்குவதற்கு பள்ளிக்கல்வி துறை பல்வேறு திட்டங்கள், சலுகைகளை தந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாணவர்கள் அதனை நன்றாக பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.