ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
திருப்புத்தூர், செப்.3: திருப்புத்தூர் அருகே மானகிரி மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ மனைவி சாந்தா(47). அரசு பள்ளி ஆசிரியர். இவரது வீட்டில் கடந்த 16ம் தேதி ஆறரை பவுன் தங்க நகைகள் திருடு போனது. புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன்(35), மதுரை மாவட்டம் கீழவளவு கலையரசன்(38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement