விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு
திருப்புத்தூர், செப். 27: திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சுதர்சன் (21). இவர் நேற்று மாலை தனது பைக்கில் சுண்ணாம்பிருப்பிலிருந்து கருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எதிரே மதுரையிலிருந்து திருப்புத்தூர் நோக்கி வந்த அரசுப் பஸ் சுண்ணாம்பிருப்பு விலக்குப் பகுதியில் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த மற்றொரு சம்பவத்தில் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் அஜய் (21). தனியார் நிதிநிறுவனத்தில் பணம் வசூலிப்பவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். பணி நிமித்தமாக தனது பைக்கில் நெடுமறத்திலிருந்து திருப்புத்தூர் நோக்கி வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அஜய்சிகிச்சைக்கு மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்துகள் குறித்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.