டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
ராமநாதபுரம், அக்.26: தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அக் 28,29, 30 ஆகிய நாட்கள் விடுமுறை அளித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது, கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.30 கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அக்.28 ,29,30 ஆகிய 3 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், எப்.எல்,2. எப்.எல்.3, உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளித்து மூடி வைக்க ஆணையிடப்படுகிறது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement