அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
திருப்புத்தூர், செப்.26: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூமாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பெண்கள் தங்கள் விளக்கில் தீபமேற்றினர். தொடர்ந்து 1008 காயத்திரி மந்திரங்கள், 108 மகாலெட்சுமி மந்திரங்களை திருவிளக்கின் செல்வி விசாலாட்சி அம்மாள் முழங்க பெண்கள் விளக்கிற்கு குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினர். இந்த விளக்கு பூஜை மாங்கல்ய பலன் வேண்டியும், மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் நடைபெற்றது. இதில் 250 பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.
Advertisement
Advertisement