நகை பறிப்பு: போலீசார் விசாரணை
சிவகங்கை, ஆக.18: சிவகங்கை பையூர் பிள்ளை வயல் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(67). இவரது மனைவி சரஸ்வதி(62). இவர் நேற்று மாலை, தனது மகள் சரஸ்வதியுடன் டூவீலரில், கோவானூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோவானூர் குண்டுமணி அம்மன் கோயில் அருகே, பின்னால் டூவீலரில் வந்த மர்மநபர்கள், இவர்களை வழிமறித்து கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.