உலக கை கழுவும் தின விழிப்புணர்வு
காளையார்கோவில், அக். 17: காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சாரண ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா தலைமை தாங்கினார். காளையார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் லதா தேவி, பெரிய கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மினி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி 2025 அக்.15ம் தேதி மையப் பொருளாக உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்பதன் முக்கியத்துவம் குறித்தும், கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்களிடம் விளக்கி கூறினார். பள்ளியின் சாரண மாணவர்கள் கை கழுவுதலின் படிநிலைகளை செய்து காட்டி விளக்கினர். இதில், தனியார் பள்ளி ஆசிரியர் பாண்டி, அழகப்பா கல்வியியல் கல்லூரி பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement