கடலாடியில் நாளை மின்தடை
சாயல்குடி, செப்.16: கடலாடி, சாயல்குடி பகுதியில் நாளை மின் தடை என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார். கடலாடி துணை மின்நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மலட்டாறு, ஒப்பிலான், மாரியூர், எஸ்.தரைக்குடி, பெருநாழி, கடலாடி, மேலச்சிறுபோது, மீனங்குடி, பொதிகுளம், ஏனாதி, ஆப்பனூர், ஏ.புனவாசல் மற்றும் முதுகுளத்தூர் அருகே உள்ள குமராக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement