சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்
தொண்டி, செப்.16: தொண்டி அருகே நம்புதாளையில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இரண்டு சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் சிறுமிகள் இருவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் 16 வயது மற்றும் 17 வயதான சிறுமிகளின் திருமணத்தையும் நிறுத்தினர். மேலும் இரு மணமகன் வீட்டாரையும் எச்சரித்தனர். குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement