பூட்டை உடைத்து நகை கொள்ளை
12:52 AM Aug 15, 2025 IST
திருப்புவனம், ஆக. 15: திருப்புவனம் அருகே மடப்புரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சோணை. இவர் தன் மனைவி கடம்பவள்ளியோடு நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டார். பகல் 12 மணிக்கு கடம்பவள்ளி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் பெட்டியில் இருந்த நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் பூவந்தி போலீசார் மூன்றறை பவுன் நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.