மானாமதுரை அருகே ரயிலில் அடிபட்டு 5 ஆடுகள் பலி
மானாமதுரை, நவ.8: மானாமதுரை அருகே திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ஐந்து ஆடுகள் பலியாகின. இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மானாமதுரை பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே வளர்ந்துள்ள புற்களை ஆடு,மாடு என கால்நடைகள் மேய்வது வழக்கம். சில நேரங்களில் ரயில் மோதி கால்நடைகள் உயிரிழந்தும் உள்ளது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. மானாமதுரை வந்த ரயில் மேலக்கொன்னக்குளம் ரயில் நிலையம் அருகில் சென்ற போது, தண்டவாளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஐந்து ஆடுகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. தகவலின் பேரில் மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்
Advertisement
Advertisement