காய்கறி, பழக்கன்று தொகுப்பு விவசாயிகள் பெற அழைப்பு
சிவகங்கை, ஜூலை 31: சிவகங்கை வட்டார விவசாயிகள் காய்கறி மற்றும் பழக்கன்று தொகுப்பு பெறலாம். இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரியங்கா தெரிவத்ததாவது: சிவகங்கை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் கீழ் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் மூலமாக மானியத்தில் கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டை, கீரை ஆகிய 6 வகையான விதைகள் கொண்ட தொகுப்பும், 3 வகையான கொய்யா, பப்பாளி, எலுமிச்சை பழக்கன்று தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பயனாளி விதை தொகுப்பு அல்லது பழக்கன்று தொகுப்பு என ஏதேனும் ஒரு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பாக பயன்பெற விருப்பமுள்ளவர்கள் சிவகங்கை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த தலைமுறையை உருவாக்க இத்திட்டத்தில் பயன்பெறலாம், என்றார்.