ஓய்வூதியம் வழங்க பூசாரிகள் கோரிக்கை
ராமநாதபுரம், ஜூலை 30: கடலாடி அருகே சமத்துவபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட கிராம பூசாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் நாகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் பூசாரிகள் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விரைந்து ஓய்வூதியம் கிடைப்பதற்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் மாநில ஆலோசனை கமிட்டி உறுப்பினர் காளிமுத்து, மாவட்ட தலைவர் சந்தனகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் தேவராஜ் நன்றி கூறினார்.