ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு
திருப்புவனம், ஜூலை 29: திருப்புவனம் அருகே புதூரில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு ஒன்றிய தலைவர் முத்துராஜா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் அய்யம்பாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் அருணன் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய தலைவராக நிருபன்பாசு, ஒன்றிய செயலாளராக முத்துராஜா, ஒன்றிய பொருளாளராக துரைச்செல்வம், துணைத் தலைவர்களாக தென்பாண்டி, ராஜேஷ், துணைச் செயலாளர்களாக ஏங்கல்ஸ் ராமன், கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில், திருப்புவனம் பேருந்து நிலைய பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும். திருப்புவனத்தில் அம்ரீத் திட்டத்தில் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்திட வேண்டும். லாடனேந்தல்-பெத்தானேந்தல் இணைப்பு பாலத்தை விரைந்து முடித்திட வேண்டும். புதியதாக கட்டவுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சுற்றியுள்ள மரங்களை அப்புறப்படுத்தாமல் கட்டிட பணிகளை தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.