ஆர்.எஸ் மங்கலம் சுற்றுவட்டாரத்தில் விவசாய பணிகள் தீவிரம்
ஆர்.எஸ்.மங்கலம். அக்.25: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் களைக் கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆனந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயல்களில் நெற்பயிர்களுடன், முளைத்து வரும் களைகளால் சாகுபடி பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் வயல்களில் உள்ள களைகளை கட்டுப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.மங்கல சுற்று பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் ஸ்பிரேயர் மற்றும் கைத்தெளிப்பான் மூலம் களைக்கொல்லி மருத்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வயல் வரப்புகளை சீரமைத்தல், களை பறித்தல், உரமிடுதல் உள்ளிட்ட விவசாயப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement