திமுக செயற்குழு கூட்டம்
சிவகங்கை, ஆக. 12: திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் பொன்.இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். தமிழ்நாடு ஓரணியில் கழக உறுப்பினர்கள் சேர்த்தல் படிவங்களை மாவட்டக் கழகம் மற்றும் தலைமை கழகத்தில் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. தமிழக மக்களுக்கு நலம் காக்கும் மருத்துவ முகாம் புதிய திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொற்கோ, ஒன்றிய கழக நிர்வாகிகள் ரவி, ராமு, சக்திமுருகன், வெங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தேவதாஸ், மாவட்ட தொழிலாளர்கள் துணை அமைப்பாளர் சங்கர், தொமுச பிச்சை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவுக்கரசு, துணை அமைப்பாளர்கள் காளிதாஸ், கணேஷ்பிரபு, மலைராஜன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் கலந்து கொண்டனர்.