ராசிபுரம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
ராசிபுரம், மார்ச் 13: ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 60ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் சாலை, சாக்கடை, குடிநீர் போன்ற மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் இருக்கும் சாக்கடைகளை, தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு தூர்வாரும் பணிகள் நடந்தது. சாலையின் இரு பறங்களிலும் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது. இந்த பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement