காங்.,மாவட்ட தலைவரின் தந்தை மறைவு செல்வப்பெருந்தகை நேரில் அஞ்சலி
தாராபுரம்,மே18: தாராபுரத்தில் வழக்கறிஞராக இருப்பவர் தென்னரசு. இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக பொறுப்பு வைக்கிறார். இவரது தந்தை கிட்டுச்சாமி தாராபுரத்தை அடுத்த நல்லாம்பாளையம் கிராமத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.இவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் வந்து மறைந்த கிட்டுச்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞருமான தென்னரசுவின் தகப்பனார் கிட்டுச்சாமி காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். தனது தந்தையாரை இழந்து வாடும் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவரது இரங்கல் செய்தியில் அறிவித்துள்ளார்.தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திமுகவினர் மறைந்த கிட்டுச்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.