காவிரியில் படகு சவாரி செய்து குதூகலம்
இடைப்பாடி, செப்.15: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி கரையில் விடுமுறை நாட்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று வார விடுமுறையையொட்டி, பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். கார், டெம்போ, டூவீலரில் குடும்பத்தோடு சுற்றுலா வந்திருந்தவர்கள் பரந்து விரிந்து செல்லும் காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். மேலும், விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் அங்குள்ள மீன் கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. மீன்களை வாங்கி குடும்பமாக ருசித்து சாப்பிட்டனர்.
இடைப்பாடி அருகே பில்லுக்குறிச்சி கிழக்கு கால்வாயில் 800 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. நேற்று இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள், காலை முதல் மாலை வரை கால்வாயில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.