நெல்லை அருகே பள்ளி மாணவி மாயம்
நெல்லை,மே 23: நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள எஸ்.குப்பனாபுரத்தை சேர்ந்தவர் முருகன்(50). கூலித்தொழிலாளி. இவரது மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ம் வகுப்பு சென்றுள்ளார். மேலும் அருகேயுள்ள அழகியபாண்டிய புரத்திற்கு தையல் வகுப்பிற்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் தையல் வகுப்பிற்கு சென்ற மானவியை காணவில்லை. இது குறித்து மாணவியின் தாய் இந்திரா நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement