பாம்பு கடித்து பள்ளி மாணவி பரிதாப சாவு
Advertisement
பாடாலூர், மே 22: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் சுபாஸ்ரீ (13). அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். சம்பவத்தன்று கடந்த 19ம்தேதி வீட்டிலிருந்த சுபாஸ்ரீயை விஷப்பாம்பு கடித்து விட்டது.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று சுபாஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement