பாலிதீன் பைக்கு சொல்லுங்க ‘குட் பை’
சிவகங்கை, ஜூன் 14: பாலிதீன் பைகள் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை அறியாமல் உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் பாலிதீன் பைகளை உணவு பார்சல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஓட்டல்கள், டீக்கடைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலிதீன் பயன்பாட்டை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.