கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தூய்மை பணியாளர்கள் சங்கம் மனு
புதுக்கோட்டை, ஜூலை 11: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் திரவியராஜ் தலைமையில், மாவட்டச் செயலாளர் மாரியப்பன் முன்னிலையில் சங்க பணியாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க கோரியும், பணி வரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் ரமேஷிடம் மனு கொடுத்தனர்.