புதுகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் மனு
புதுக்கோட்டை,ஜூலை 16: தமிழ்நாடு ஊராட்சி மேநீர் தேக்க தொட்டி பவர் பம்பு இயக்குனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரசாணை எண் 33ன் படி கடந்த 2017ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனே வழங்க வேண்டும்,
மாதம் 250 ரூபாய் ஊதியத்தில் 15 ஆண்டுகளாக இயக்குனர்களாக பணியாற்றி வரும் பணியாளர்களின் ஊதியத்தை 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அதேபோல் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் இயக்குனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் நிறைவேற்ற வேண்டுமென கூறினர்.