பருவ மழைக்கால ஒத்திகை பயிற்சி
கெங்கவல்லி, அக்.30: கெங்கவல்லி அருகே, புங்கவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு, தீயணைப்புத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி உத்தரவின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில், நிலைய அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் புங்கவாடி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு, மழையின் போது திடீரென வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் அவரை எவ்வாறு காப்பாற்றுவது குறித்து, தீயணைப்புத் துறை வீரர்கள் விளக்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement