லாரி மீது கல்லூரி பஸ் மோதி 4 மாணவிகள் காயம்
சேலம், ஆக.29: சேலம் தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்யா(26). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரி பஸ்சில் ஏறினார். சீலநாயக்கன்பட்டி பக்கம் கல்லூரி பஸ் வந்தபோது, எதிரே நின்று ெகாண்டிருந்த லாரி மீது, கல்லூரி பஸ் வேகமாக மோதியது. இதில் சவுந்தர்யா உள்பட 4 மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் சவுந்தர்யாவுக்கு கண் நெற்றி, காலில் ரத்தகாயமும் ஏற்பட்டது. உடனடியாக 4 மாணவிகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவி சவுந்தர்யா கொடுத்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டிரைவர் சுரேஷ்குமார் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement