பாமக உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம்
இடைப்பாடி, அக்.28: சேலம் தெற்கு பாமக மாவட்ட செயலாளர் செல்வகுமார், இடைப்பாடி நகர பாமக செயலாளர் சண்முகம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் தெற்கு மாவட்டத்திற்கு, இடைப்பாடி நகரம், ஆவணியூர் திருமலை நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி அளவில், பாமக கட்சி தலைவர் அன்புமணி, தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்திற்கு பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநில தேர்தல் பணி குழு நிர்வாகிகள், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், மாநில மாவட்ட நிர்வாகிகள், பாமக சார்பு அமைப்பு நிர்வாகிகள், மாநில, மாவட்ட இளைஞர் சங்கம் மாணவர்கள், சங்கங்கள் மகளிர் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் நகர ஒன்றிய பேரூர் ஊராட்சி கிளை நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.