கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஓமலூர், ஆக.27: ஓமலூர் அருகே மேச்சேரி பிரிவு சாலையில் வெற்றி விநாயகர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் நிலையில், நேற்று தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில், திமுக ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், செல்வகுமாரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், காளை, பசு, குதிரைகள் புடை சூழ, பாம்பை மேளம் முழங்க கோபுரம் கலசம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஈஸ்வரன் கோயிலில் இருந்து தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். தற்போது சாகுபடி பணிகள் நடந்து வருவதால், விதைகளின் முளைப்பு திறனை அறிந்துகொள்ள வேண்டி, அனைத்து தானிய முளைப்பாரிகளை எடுத்து கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.
Advertisement
Advertisement