பொருட்கள் பறித்த 3 ரவுடிகளுக்கு வலை
ஓமலூர், நவ.26: சேலம் மாவட்டம், ஓமலூர் ஊமை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் டோங்காசிங். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரில் குடும்பத்துடன் தங்கி, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 3 போதை வாலிபர்கள் வந்து, 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டனர். அவர் இல்லை என்று கூறிய போது, சில்லறை இல்லாவிட்டால் பணம் கொடு என்று கேட்டு தகராறு செய்து, கடையில் இருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்து நொறுக்கினர். மேலும், மது குடிப்பதற்காக உணவு பொட்டலங்களை அள்ளிச் சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டோங்காசிங் ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போதை நபர்களை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement