கல் அறைக்கும் மில்லில் இரும்புகள் திருட்டு
சங்ககிரி, செப்.26: சங்ககிரி அருகே மொத்தையனூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (58). இவர் கல் அறைக்கும் மில் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களாக வேலை எதுவும் நடக்காமல் மில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் (24ம் தேதி) காலை 11 மணியளவில், செல்லப்பன் மில்லுக்கு சென்று பார்வையிட்ட போது, அங்கு இரும்பு பேரலில் கொட்டி வைத்திருந்த ஒன்றரை டன் எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள இரும்பு பால்கள், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2 கீர் மோட்டார், லாரியின் ஸ்பிரிங் பட்டை, பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் திருடு பேயிருந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஒருவார காலமாக அடையாளம் தெரியாத 3 ேபர் இரும்பு பொருட்களை திருடிச்சென்ற தெரியவந்தது. இதனையடுத்து செல்லப்பன் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து, நாமக்கல் மாவட்டம் படைவீடு கிராமம் சாமாண்டியூரை சேர்ந்த அஜய்(25), தீபன், நந்தகுமார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அஜயை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.