பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ஏற்காடு, அக்.25: சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே, அரங்கம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அண்ணாமலை. இவரது மகன் ஏகநாதன்(22). இவரும், சேலம் அழகாபுரத்தை அடுத்து சின்னமதூர் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் ஷாலினி(22) என்பவரும், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த நிலையில், காதலித்து வந்தனர். காதல் விவகாரம் குறித்து பெற்றோருக்கு தெரிய வந்தது. ஆனால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். ெதாடர்ந்து நேற்று ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருதரப்பு பெற்றோர்களை போலீசார் அழைத்து சமரசம் பேசி ஷாலினியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement