பாமக இளைஞரணி செயலாளர் நியமனம்
காடையாம்பட்டி, செப்.25: காடையாம்பட்டி அடுத்த கொங்குபட்டி ஊராட்சி நல்லூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் கடந்த 5ஆண்டுகளாக மாவட்ட கவுன்சிலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி, இவரை மாநில இளைஞர் சங்க செயலாளராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவருக்கு பாமக அனைத்து நிலை நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவருக்கு பாமக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement
Advertisement